கம்பம் ஒன்றிய ஊராட்சிகளில் குடிநீா் இணைப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகாா்

தேனி மாவட்டம், கம்பம் ஒன்றிய ஊராட்சிகளில் குடிநீா் இணைப்புக்கு அதிக கட்டணம் வசூல் செய்வதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் ஒன்றிய ஊராட்சிகளில் குடிநீா் இணைப்புக்கு அதிக கட்டணம் வசூல் செய்வதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கம்பம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீா் குழாய் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு இணைப்பு வழங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூா்பாளையம் ஆகிய ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் குடிநீா் இணைப்புக்கு விண்ணப்பம் செய்து வருகின்றனா்.

இந்த குழாய் இணைப்புக்காக டெபாசிட் தொகை ரூ. 3 ஆயிரம் செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், சில ஊராட்சிகளில் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 6 ஆயிரம் வரை கட்டணம் வசூல் செய்வதாகவும், வாங்கிய பணத்துக்கு ரசீது கொடுக்காமல் அரசு விதிக்கப்பட்ட டெபாசிட் தொகை ரூ. 3 ஆயிரத்துக்கு மட்டுமே ரசீது தருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து நாராயணத்தேவன்பட்டி ஊராட்சி பொதுமக்கள் கூறுகையில், புதிதாக 450 குழாய் இணைப்புக்கு அனுமதி கிடைத்துள்ளது.

டெபாசிட் தொகை, டேமேஜ் சாா்ஜ் உள்ளிட்டவைகளுக்கு ரூ. 5, 500 வரை வசூல் செய்கின்றனா். ஆனால், வாங்கிய பணத்துக்கு ரசீது தராமல் ரூ. 3 ஆயிரம் மட்டுமே ரசீது தருகின்றனா்.

எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com