இ-பாஸ் பெற்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தம்: காவல்துறையைக் கண்டித்து போடியில் போராட்டம்

போடியில் இ-பாஸ் பெற்ற விவசாயிகள் கேரள பகுதிக்கு செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்ததை கண்டித்து விவசாயிகள் சோதனைச் சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இ-பாஸ் பெற்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தம்: காவல்துறையைக் கண்டித்து போடியில் போராட்டம்

போடியில் இ-பாஸ் பெற்ற விவசாயிகள் கேரள பகுதிக்கு செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்ததை கண்டித்து விவசாயிகள் சோதனைச் சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் போடி, ராசிங்காபுரம், தேவாரம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏலத் தோட்டம் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். கரோனா பொதுமுடக்கு காரணமாக விவசாயிகள் கேரள பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து விவசாயிகள் தேனி மாவட்ட நிர்வாகத்தை அணுகினர். இதனையடுத்து தேனி மற்றும் இடுக்கு மாவட்ட ஆட்சியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளுக்கு ஒரு நாள் மற்றும் 7 நாட்கள் கேரளத்துக்கு சென்றுவர இ-பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து கடந்த சில தினங்களாக விவசாயிகள் பலர் இ-பாஸ் பெற்று கேரளத்துக்கு சென்று தங்கள் தோட்டங்களை பார்வையிட்டு வருகின்றனர். இ-பாஸ் பெறுபவர்களின் எண்ணிக்கையும், அங்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது. மேலும் கேரளத்துக்கு செல்பவர்கள் குமுளி எல்லை வழியாக மட்டுமே உள்நுழைய வேண்டும் என்று கேரள மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. போடி, ராசிங்காபுரம், தேவாரம் பகுதியை சேர்ந்தவர்கள் குமுளி வழியாக தங்கள் தோட்டங்களுக்கு செல்ல வேண்டுமெனில் 150 கி.மீ.-க்கும் அதிகமாக தொலைவு சுற்றிவர வேண்டியுள்ளது.

இதனால் போடி, ராசிங்காபுரம், தேவாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் போடிமெட்டு வழியாக சென்று வந்தனர். இரண்டு தினங்களாக போடிமெட்டு வழியாக அனுமதித்த நிலையில் திடீரென வெள்ளிக்கிழமை, காவல்துறையினர் போடிமெட்டு வழியாக இ-பாஸ் பெற்று சென்றவர்களை தடுத்தி நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் போடி முந்தல் சோதனைச் சாவடியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த போடி டி.எஸ்.பி. ஈஸ்வரன், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

பின்னர் அவர் மேலதிகாரிகளிடம் பேசியதில் ஒரு நாள் இ-பாஸ் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறி விவசாயிகளை திருப்பி அனுப்பினார். மேலும் இ-பாஸ் பெற்றவர்கள் குமுளி வழியாக மட்டுமே செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். இதனால் விவசாயிகள் திரும்பிச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com