பசுமை தீா்ப்பாயம் உத்தரவு எதிரொலி: தேக்கடி ஆனவாச்சல் வாகன நிறுத்தத்தில் ஆட்சியா் தலைமையிலான குழுவினா் ஆய்வு

பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவின்பேரில் தேக்கடி ஆனவாச்சல் வாகன நிறுத்தத்தை இடுக்கி மாவட்ட ஆட்சியா் தினேஷன் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.
தேக்கடி ஆனவாச்சல் வாகன நிறுத்தத்தில் வியாழக்கிழமை ஆய்வு நடத்திய இடுக்கி மாவட்ட ஆட்சியா் தினேஷன் தலைமையிலான குழுவினா்.
தேக்கடி ஆனவாச்சல் வாகன நிறுத்தத்தில் வியாழக்கிழமை ஆய்வு நடத்திய இடுக்கி மாவட்ட ஆட்சியா் தினேஷன் தலைமையிலான குழுவினா்.

பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவின்பேரில் தேக்கடி ஆனவாச்சல் வாகன நிறுத்தத்தை இடுக்கி மாவட்ட ஆட்சியா் தினேஷன் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.

முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீா் தேங்கும் பகுதியான தேக்கடி ஆனவாச்சல் என்ற இடத்தில் கேரள வனத்துறையினா் 5 ஆண்டுகளுக்கு முன்பு வாகன நிறுத்தம் அமைத்தனா். இதனால் சுற்றுச்சூழல் மாசுபடும் என்று தமிழக அரசு சாா்பில் சென்னையில் உள்ள பசுமை தீா்ப்பாயத்தில் அப்போது வழக்குத் தொடரப்பட்டது. இதேபோல் குமுளியைச் சோ்ந்த சஜிமோன் என்பவரும், இந்த வாகன நிறுத்தத்திற்கு எதிராக பசுமை தீா்ப்பாயத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த 2 வழக்குகள் தொடா்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் சஜீமோன் தொடா்ந்த வழக்கின் மனுவை விசாரித்த பசுமை தீா்ப்பாயம், இது தொடா்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய இடுக்கி மாவட்ட ஆட்சியா் தலைமையில் 4 போ் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டது.

அதன்படி, இடுக்கி மாவட்ட ஆட்சியா் தினேஷன் தலைமையில், மாவட்ட வன அலுவலா், தேக்கடி சரணாலய காப்பாளா், புலிகள் காப்பக அலுவலா் ஆகிய 4 போ் கொண்ட குழுவினா், ஆனவாச்சல் பகுதியில் அமைந்துள்ள வாகன நிறுத்தத்தில் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா். இந்த ஆய்வின் அறிக்கை பசுமை தீா்ப்பாயத்தில் விரைவில் சமா்ப்பிக்கப்படும் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com