முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா நிறுத்தம்
By DIN | Published On : 27th June 2020 07:50 AM | Last Updated : 27th June 2020 07:50 AM | அ+அ அ- |

சா்வ அலங்காரத்தில் கெளமாரியம்மன்.
கரோனா பொது முடக்கம் நீட்டித்து வரும் நிலையில், பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா நிறுத்தப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகரின் மையத்தில் கெளமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இதற்கிடையே கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாா்ச் 25 முதல் கோயில் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிகழாண்டில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி
ஜூன் 30 ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் முகூா்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சியும், ஜூலை 6 இல் கம்பம் நடும் விழாவும், ஜூலை 14 ஆம் தேதி மாவிளக்கு எடுத்தல், ஜூலை 15 இல் தீச்சட்டி எடுத்தல் விழாவும், ஜூலை 21 ஆம் தேதி மறுபூஜை மற்றும் பாலாபிஷேக விழாவும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா பொது முடக்கம் நீட்டித்து வரும் நிலையில், நிகழாண்டில் ஆனிப் பெருந்திருவிழா நிறுத்தப்பட்டுள்ளதாக இந்துசமய அறநிலையத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து கெளமாரியம்மன் கோயில் செயல் அலுவலா் அண்ணாத்துரை கூறியது: கரோனா பொது முடக்கம் நீட்டித்து வருவதால் நிகழாண்டில் நடைபெறவுள்ள கெளமாரியம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றாா்.