கூடலூரில் மரபுவழி மருந்து தயாரிக்கும் பயிற்சி

தேனி மாவட்டம் கூடலூரில் மகளிர் குழுக்களுக்கு மரபு வழி மருந்து தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது.
கூடலூரில் மரபுவழி மருந்து தயாரிக்கும் பயிற்சி

தேனி மாவட்டம் கூடலூரில் மகளிர் குழுக்களுக்கு மரபு வழி மருந்து தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது.

தேனி மாவட்டம் கூடலூரில் அருந்தமிழ் சன்மார்க்க வைத்திய அறக்கட்டளை சார்பாக, மரபுவழி மருத்துவம் தன்னில் மகிமையுடைய மகளிர் என்ற தலைப்பின் நோக்கில் அருந்தமிழ் மகளிர் குழுவின் பெண்களுக்கு கபசுரக்குடிநீர் காய்ச்சுதல், கூந்தல் வளர தைலப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. 

15 க்கும் மேற்பட்ட பெண்கள் மரபு வழி மருந்து தயாரிக்கும் பயிற்சியில் கலந்து கொண்டனர். இது பற்றி தேனிமாவட்ட செந்தமிழ் பாரம்பரிய சித்த வைத்தியர்கள் சங்க செயலாளர் நந்தகோபால் கூறும்போது, பெண்கள் சுயமாக தொழில் செய்து வாழ்வில் முன்னேறும் தன்மையையும், தமிழரின் பாரம்பரிய மருத்துவக் கலையினையும், நம்பிக்கையும், ஆற்றலையும் பெறுவர் என்றார்.

மேலும் இக்குழுவின் தலைவி சித்தாயி, உபதலைவி காஞ்சனா ஆகியோர் கூறுகையில், நமது தமிழ்மருத்துவக் முறை கலையினை எங்களைப்போன்று அனைத்து மகளிரும் கற்றுப் பயன்பெற தேனி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com