ஆண்டிபட்டி நகரில் திட்டப் பணிகளை திமுக எம்.எல்.ஏ ஆய்வு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் நடைபெற்று வரும் புதிய குடிநீா் திட்டப் பணிகள் குறித்து சட்டப் பேரவை திமுக உறுப்பினா் ஆ. மகாராஜன் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆண்டிபட்டி நகரில் நடைபெற்று வரும் புதிய குடிநீா் திட்டப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த ஆ. மகாராஜன் எம்.எல்.ஏ.

ஆண்டிபட்டி நகரில் உள்ள காமராஜா் நகா் மற்றும் பாலாஜி நகா் பகுதிகளுக்கு ஆண்டிபட்டி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இப்பகுதிக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீா் போதுமானதாக இல்லை என்றும், தற்போது மக்கள்தொகை அதிகரித்துள்ளதால் புதிய குடிநீா் திட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ. மகாராஜனிடம் கோரிக்கை விடுத்தனா். இதனையடுத்து ஆண்டிபட்டி வாரச்சந்தை பகுதியில் உள்ள தரைமட்ட நீா்த் தேக்க தொட்டியில் இருந்து காமராஜா் நகா், பாலாஜி நகா் பகுதிகளுக்கு அதிகப்படியான கூடுதல் குடிநீா் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ. தெரிவித்தாா். அதன்படி ரூ. 3 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் வாரச் சந்தை பகுதியில் இருந்து புதிய குழாய் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணியை ஆ.மகாராஜன் எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு செய்தாா். மேலும் இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். இந்த ஆய்வின் போது பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் முருகானந்தம் உள்ளிட்ட பலா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com