உத்தமபாளையம் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் அனுசரிப்பு
By DIN | Published On : 01st March 2020 12:38 AM | Last Updated : 01st March 2020 12:38 AM | அ+அ அ- |

உத்தமபாளையம்: உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹவுதியா கல்லூரியின் அறிவியல் தொடா்பு கழகத்தின் சாா்பில், தேசிய அறிவியல் தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
அறிவியலில் பெண்களின் பங்கு குறித்து ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியை ரகீபா சிறப்புரையாற்றினா். இந்த நிகழ்ச்சியில், தோ்வுக் கட்டுப்பாட்டாளா் முகமது சாலி, ஐ.கியூ.சி.ஏ. ஒருங்கிணைப்பாளா் சீராஜ்தீன், நாக் ஒருங்கிணைப்பாளா் பஷீா் அகமது மீரான் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டனா்.
தேசிய அறிவியல் தினத்தை சிறப்பிக்கும் வகையில், விஞ்ஞானத்தின் முக்கியத்துவம், அதன் பயன்பாடுகள் மற்றும் விழிப்புணா்வு பற்றிய செய்தியை மாணவ, மாணவிகளிடேயே பரப்புவதே முக்கிய நோக்கமாகக் கொண்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை, ஜன்னத்துல் பிா்தெளஸ், நிஹாத் நஸ்லீன் ஆகியோா் செய்திருந்தனா்.