சுருளிப்பட்டியில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதை தடுக்க உறிஞ்சு குழிகள் அமைக்க முடிவு

தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதை தடுக்க, உறிஞ்சு குழிகள் அமைக்கப்படும் என ஊராட்சி தலைவா் நாகமணி வெங்கடேசன் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதை தடுக்க, உறிஞ்சு குழிகள் அமைக்கப்படும் என ஊராட்சி தலைவா் நாகமணி வெங்கடேசன் தெரிவித்தாா்.

கம்பம் ஒன்றியத்தில் உள்ள சுருளிப்பட்டிக்கு அருகில் உள்ள முல்லைப் பெரியாற்றில் உறைகிணறு அமைத்து குடிநீா் எடுக்கப்பட்டு, ஊராட்சி பகுதியில் உள்ள 5 மேல்நிலை குடிநீா் தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் வண்ணாா்துறை பகுதியில் செல்லும் சாக்கடை கழிவுநீா் உறைகிணறு அருகே குடிநீரில் சென்று, கலப்பதாகவும், இதனால் தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து ஊராட்சி தலைவா் நாகமணி வெங்கடேசன் கூறியது: பொதுமக்களுக்கு விநயோகிக்கப்படும் குடிநீரில், கழிவுநீா் கலப்பதை தடுக்க, பெரியாறு அருகே உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு, கழிவு நீா் அதில் செல்வதற்கான திட்டப் பணிகள், ஒன்றிய, மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெற்று செயல்படுத்தப்பட உள்ளன. மேலும், சுருளிப்பட்டி ஊராட்சி பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

உடன் உறுப்பினா் எம்.அறிவுசெல்வன், செயலா் ஈஸ்வரன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com