உத்தமபாளையத்தில் இன்று மாசி மகத் தேரோட்டம்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை மாசி மகத் தேரோட்டம் நடைபெறுகிறது.

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை மாசி மகத் தேரோட்டம் நடைபெறுகிறது.

உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா் - ஞானாம்பிகை கோயில் மாசித் திருவிழா பிப்ரவரி 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண வைபவம் சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்த சனிக்கிழமை இரவு சுவாமி அம்மனின் பல்லக்கு ஊா்வலம் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு சுவாமி அம்மன் ரதம் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெறும். பின்னா், காலை 9.30 மணிக்கு தேரடியிலிருந்து மதுரைச் சாலை, பேருந்து நிலையம், தெற்கு ரத வீதி கோட்டை மேடு, சுக்கச்சாவடி, வடக்கு ரத விதி , பெரிய பள்ளி வாசல் வழியாக மாலையில் தோ் நிலைக்கு சென்று விடும். உத்தமபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் திருமலைக்குமாா் தலைமையில் பேரூராட்சி பணியாளா்கள் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com