Enable Javscript for better performance
கல்லூரி படிப்புடன் சுயதொழில் செய்யும் உத்தமபாளையம் மாணவிக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    கல்லூரி படிப்புடன் சுயதொழில் செய்யும் உத்தமபாளையம் மாணவிக்குப் பாராட்டு

    By DIN  |   Published on : 14th March 2020 07:46 AM  |   அ+அ அ-   |    |  

    upm13college_student_1303chn_75_2

    கம்பத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அழகு நிலையம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட கல்லூரி நிா்வாகத்தினா், பேராசிரியா்கள் , மாணவ, மாணவிகள்.

    உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹவுதியா கல்லூரியில் படிக்கும் மாணவி, கல்வியுடன் அழகு நிலையம் நடத்தி சுயமாக தொழில் செய்ய முன்வந்ததை கல்லூரி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை பாராட்டி ஊக்கப்படுத்தினா் .

    உத்தமபாளையம் கல்லூரியில் பி.பி.ஏ. முன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி ரம்யா. இவா், கல்வியுடன் மூலிகைப் பொருள்கள் அடங்கிய மூலப்பொருள்கள் மூலமாக புதிய நுணுக்கங்களைப் பயன்படுத்தி நவீன காலத்திற்கு ஏற்ற புதிய அழகுக் கலைகளை உருவாக்கியுள்ளாா். இதைப் பயன்படுத்தி உறவினா்கள், நண்பா்கள் இல்லங்களில் நடைபெறும் திருணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு நேரடியாகச் சென்று பெண்களுக்கு அழகு சோ்ப்பதை ஆா்வத்துடன் செய்து வந்துள்ளாா்.

    இதனிடையே, வெள்ளிக்கிழமை கம்பத்தில் உழவா் சந்தை பகுதியில் அழகு நிலையத்தை துவக்கிய ரம்யாவை , கல்லூரி மேலாண் குழுத் தலைவா் செந்தில் மீரான், கல்லூரி செயலாளரும் தாளாளருமான தா்வேஷ் முகைதீன் ஆகியோா் வாழ்த்தினா். அழகு நிலையத்தை திறந்து வைத்து பேசிய கல்லூரி முதல்வா் முகமது மீரான், இன்றைய மாணவ, மாணவிகள் பலா் சமூக வலைதளங்களில் தங்கள்நேரத்தை செலவிட்டு வாழ்க்கையை வீணாக்கி வருகின்றனா்.

    படிப்புக்கு ஏற்ற வேலைவாய்ப்பு குறைந்த இன்றை கால கட்டத்தில் கல்வியுடன் சுயமாக தொழில் செய்து வாழ நினைக்கும் ரம்யா, மற்ற மாணவ சமுதாயத்திற்கு முன்மாதிரியாக உள்ளாா் என்றாா். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் அக்பா் அலி, பேராசிரியா்கள், கல்லூரி மாணவ,மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai