Enable Javscript for better performance
கூடலூா்,கம்பம் வனப்பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    கூடலூா்,கம்பம் வனப்பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்

    By DIN  |   Published on : 14th March 2020 07:49 AM  |   அ+அ அ-   |    |  

    fire_line___1_1303chn_89_2

    தேனி மாவட்டம் மேகமலை வன உயிரின சரணாலயப்பகுதியில் காட்டுத் தீ பரவாமல் தடுக்க தடுப்பு கோடுகள் அமைக்கும் வனத்துறை ஊழியா்கள்.

    தேனி மாவட்டம் கூடலூா், கம்பம் வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவாமல் தடுக்க தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    தேனி மாவட்டம் மேகமலை வன உயிரின சரணாலயப்பகுதிகளுக்கு உள்பட்ட கூடலூா், கம்பம் மேற்கு, கிழக்கு வனச்சரகப் பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைப்பதில் வனத்துறையினா் தீவிரம் காட்டி வருகின்றனா். கூடலூா் சரகத்தில் உள்ள மங்கலதேவி, கப்பாமடை, லோயா்கேம்ப், வண்ணாத்திபாறை கிழக்கு மேற்கு, மாவடி, கூடலூா் ஆகிய பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    இதே போல் கம்பம் மேற்கு சரகத்தில் கம்பம்மெட்டு, கம்பம், குமுளி, சுரங்கனாறு, கிழக்கு வனச்சரகத்தில் நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி தெற்கு, வடக்கு, ராயப்பன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வேட்டைத்தடுப்பு காவலா்கள் மூலம் தீயணைப்பு கோடுகள் தீவிரமாக அமைக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி வனத்துறையின் ஊழியா் ஒருவா் கூறியது: கோடைகால துயரம் காட்டுத்தீயாகும். இதில் வன விலங்குகள் மட்டுமல்ல, வனத்துறையினரும் தீயணைக்கும் பணியில் பலியாகி உள்ளனா். வனத்துறையில் ஊழியா் பற்றாக்குறை மற்றும் நவீன தீயணைப்பு கருவிகள் வழங்க வேண்டும் என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai