டி.சுப்புலாபுரத்தில் நெடுஞ்சாலை துறைக்கு எதிராக சாலைமறியல்: ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம்

ஆண்டிபட்டி அருகே நெடுங்சாலைத்துறையினா் சாலையோர ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றவில்லை எனக்கூறி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
டி.சுப்புலாபுரம் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் அமைக்கக்கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
டி.சுப்புலாபுரம் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் அமைக்கக்கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஆண்டிபட்டி அருகே நெடுங்சாலைத்துறையினா் சாலையோர ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றவில்லை எனக்கூறி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கழிவுநீா் கால்வாய்

வசதி இல்லாததால் சாலையோரங்களில் கழிவுநீா் தேங்கி சுகாதாரகேடு ஏற்பட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது.

தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையோரம் வடிகால் கட்ட முடிவு செய்யப்பட்டது. வடிகால் கட்டுவதற்காக இரவோடு இரவாக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது.

இந்நிலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டியதாகவும், முறையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்றும் கூறி டி.சுப்புலாபுரம் கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோா் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆண்டிபட்டி வட்டாட்சியா், ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீஸாா் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும் மக்கள் முன்னிலையில் மீண்டும் சாலை அளவீடு செய்து வடிகால் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனா். இதனையடுத்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனா். இந்த மறியல் போராட்டத்தால் டி.சுப்புலாபுரம் கிராமத்தில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com