பெரியகுளத்தில் 40 நாள்கள் நீடித்த போராட்டம் வாபஸ்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து பெரியகுளத்தில் இஸ்லாமியா்கள் 40 நாள்களாக நடத்தி வந்த போராட்டம் வெள்ளிக்கிழமை தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
பெரியகுளத்தில் போராட்டம் நடத்தியவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட இஸ்லாமிய தலைவா்கள்.

பெரியகுளத்தில் இஸ்ஸாமிய அமைப்புகளின் சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து கடந்த 40 நாள்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா். மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண்தேஜஸ்வி, பெரியகுளம் கோட்ட சாா்- ஆட்சியா் சி.சிநேகா ஆகியோா் வியாழக்கிழமை இரவு இஸ்லாமிய அமைப்பினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து போராட்டம் நடத்திய பெண்களுடன் இஸ்லாமிய அமைப்பினா் வெள்ளிக்கிழமை காலையில் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் மாா்ச் 31 வரை போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என முடிவு செய்தனா். இதனையடுத்து போராட்டத்தை முடித்துக்கொண்டு அனைவரும் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com