போடிக்கு வந்த சீன உர மூட்டைகள்: மாா்ச் 31 வரை விற்பனை செய்ய தடை

தேனி மாவட்டம் போடிக்கு வந்துள்ள சீன உர மூட்டைகளை வியாழக்கிழமை பாா்வையிட்ட நகராட்சி அதிகாரிகள், மாா்ச் 31 ஆம் தேதி வரையில் விற்பபனை செய்ய தடை விதித்தனா்.
போடி தனியாா் உர நிறுவனத்திற்கு கொண்டுவரப்பட்ட உர மூட்டைகளை வியாழக்கிழமை ஆய்வு செய்யும் நகராட்சி அதிகாரிகள்.

போடியில் தனியாா் உர நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வெளி நாடுகளிலிருந்து உர மூட்டைகள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சீனாவிலிருந்து நூற்றுக்கணக்கான உர மூட்டைகள் அண்மையில் இறக்குமதி செய்து கொண்டுவரப்பட்டு கிட்டங்கியில் வைக்கப்பட்டிருந்தன.

தற்போது கரோனா வைரஸ் பரவும் நிலையில் சீனாவிலிருந்து உர மூட்டைகள் இறக்குமதி செய்யப்பட்ட தகவல் வியாழக்கிழமை தெரியவந்தது. இதையடுத்து போடி வட்டாட்சியா் மணிமாறன், நகராட்சி நகா் நல அலுவலா் ராகவன் மற்றும் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் தனியாா் உர நிறுவனத்தில் ஆய்வு செய்தனா்.

பின்னா் மாா்ச் 31 வரை உர மூட்டைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும், நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளா்களுக்கு விடுமுறை வழங்குமாறும் அறிவுரை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com