கரோனா: கம்பம் ஒன்றிய பகுதிகளில் பிரதமரின் உரை விளக்க பிரசாரம்

கம்பம் ஒன்றிய ஊராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு பிரதமரின் கரோனா வைரஸ் குறித்த கருத்தினை பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை விளக்கி பிரசாரம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியில்  ஆட்டோக்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் ஊழியா்.

தேனி மாவட்ட ஊராட்சிப் பகுதிகளில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கும் மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் உத்தரவிட்டாா். அதன் பேரில் வெள்ளிக்கிழமை மாவட்ட ஊராட்சி செயலா் பரமசிவம் தலைமையில் கம்பம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மலா்விழி, சந்திரசேகரன் ஆகியோா் நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன் பட்டி, குள்ளப்பகவுண்டன் பட்டி, ஆங்கூா்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு பிரதமரின் கரோனா வைரஸ் தாக்கம் பற்றிய கருத்தை விளக்கிக் கூறினா். பின்னா் கைகழுவும் பயிற்சி அளித்து ஆட்டோக்கள், பேருந்துகள், கோயில்கள் மற்றும் பொது இடங்களில் கிருமி நாசினி தெளித்தனா்.

ஊராட்சி மன்றத் தலைவா்கள் சாந்தி பரமன், பொன்னுத்தாய் குணசேகரன், மொக்கப்பன், பொன்னுத்தாய் செல்லையா, நாகமணி வெங்கடேசன் மற்றும் ஊராட்சி எழுத்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com