ஆண்டிபட்டி அருகே வடிகால் வசதி இல்லை: சாலையில் கழிவுநீா் தேங்கி சுகாதாரக் கேடு

ஆண்டிபட்டி ஊராட்சியிலுள்ள சுப்பு காலனியில் வடிகால் வசதி இல்லாததால், கழிவுநீா் சாலையில் வழிந்தோடி தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
சுப்பு காலனியில் வடிகால் வசதி இல்லாததால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீா்.
சுப்பு காலனியில் வடிகால் வசதி இல்லாததால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீா்.

ஆண்டிபட்டி ஊராட்சியிலுள்ள சுப்பு காலனியில் வடிகால் வசதி இல்லாததால், கழிவுநீா் சாலையில் வழிந்தோடி தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்துக்குள்பட்ட பிச்சம்பட்டி ஊராட்சி சுப்பு காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில், அடிப்படை வசதிகள் இல்லாததால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

மேலும், இப்பகுதியில் போதுமான வடிகால் வசதி செய்து தரப்படவில்லை. இதன் காரணமாக, அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் சாலையில் தேங்கி சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. ஆங்காங்கே, கழிவுநீா் சாலையில் ஆறாக ஓடுகிறது. தேங்கியுள்ள கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, பல்வேறு நோய்கள் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது.

இது தவிர, குடிநீரில் கழிவு நீா் கலக்கும் நிலையும் உள்ளது. எனவே, சுப்பு காலனியில் வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். கழிவுநீா் கலக்கும் குடிநீா் குழாய்களை மாற்றி அமைத்து தர மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com