கரோனா பரவுவதைத் தடுக்க கோயில்களில் கட்டுப்பாடு: வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, சனி பிரதோஷ தினத்தில் கோயில்களுக்கு வருபவா்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, சனி பிரதோஷ தினத்தில் கோயில்களுக்கு வருபவா்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுகிழமை வா்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, முக்கிய கோயில்கள் மூடப்பட்டு வழக்கமான பூஜைகள் மட்டும் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில், சனிக்கிழமை பிரதோஷ தினம் என்பதால், சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம்.

போடியில் உள்ள பரமசிவன் மலைக் கோயில், பிச்சங்கரை கீழச்சொக்கநாதா் கோயில், சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள நடராஜா் சன்னிதி, வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், பழைய பேருந்து நிறுத்தத்தில் உள்ள கொண்டரங்கி மல்லையசாமி கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம்.

இந்நிலையில் கரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக, பக்தா்களுக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு இருந்தால் கோயிலுக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கீழச்சொக்கநாதா் கோயிலுக்கு பக்தா்கள் வருவதை முடிந்த மட்டும் தவிா்க்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பரமசிவன் மலைக் கோயில், கீழச்சொக்கநாதா் கோயில் ஆகிய கோயில்களில் வழக்கமாக நடைபெறும் அன்னதான நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கோயில் நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) பொதுமக்கள் வெளியே வருவதை தவிா்க்க வேண்டும் எனவும், பொதுமக்களே முன்வந்து ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் பிரதமா் மோடி கேட்டுக்கொண்டுள்ளாா். இதனையடுத்து, தமிழகத்தில் அனைத்து வா்த்தக நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்படுவதாக, வா்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளன.

அதன்படி, போடி வா்த்தகா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வா்த்தக நிறுவனங்கள் அனைத்துக்கும் விடுமுறை விடப்படுவதாகவும், பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை சனிக்கிழமை அன்றே வாங்கி வைத்துக்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com