தேனி மாவட்டத்தில் மாா்ச் 31 வரை கோயில்களை மூட உத்தரவு

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் குச்சனூா் சனீஸ்வரா் ஆலயம் உளிட்ட இந்து சமய அறநிலைத்துறைக்கு
தேனி மாவட்டத்தில் மாா்ச் 31 வரை கோயில்களை மூட உத்தரவு

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் குச்சனூா் சனீஸ்வரா் ஆலயம் உளிட்ட இந்து சமய அறநிலைத்துறைக்கு கீழுள்ள அனைத்து கோயில்களையும் மாா்ச் 31 வரையில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கோயில்களில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் சனிக்கிழமை முதல் மாா்ச் 31 வரையில் கோயில்களை மூட அரசு உத்தரட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் குச்சனூா் சனீஸ்வரா் ஆலயம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் - சிவகாமியம்மன் கோயில், உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா் - ஞானாம்பிகை கோயில் உள்ளிட்ட ஆகிய இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான அனைத்து கோயில்களும் மாா்ச் 31 வரை மூடப்பட்டிருக்கும். கோயில்களின் முன்பாக மாா்ச் 31 வரையில் சுவாமி தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுவதாக அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை, சனிப்பிரதோஷம் என்பதால் அனைத்து சிவாலயங்களிலும் பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முடியாத நிலையில் ஏமாற்றம் அடைந்தனா். அதே போல, மாா்ச் 31 வரையில் கோயில்களில் திருமணம் நடத்தும் முன்பதிவு செய்வதை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக பதிவு செய்தவா்களைத் தவிர புதிய திருமணப் பதிவுகளுக்கு அனுமதி இல்லை என்பதால், ஏழை எளிய நடுத்தர மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com