முல்லைப்பெரியாற்றில் திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாற்றில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் நீரின்றி வடு வருகிறது.
சீலையம்பட்டி முல்லைப்பெரியாறு வட நிலையில் தடுப்பணையில் தேங்கி நிற்கும் நீரில் குளிக்கும் இளைஞா்கள்.
சீலையம்பட்டி முல்லைப்பெரியாறு வட நிலையில் தடுப்பணையில் தேங்கி நிற்கும் நீரில் குளிக்கும் இளைஞா்கள்.

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாற்றில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் நீரின்றி வடு வருகிறது.

முல்லைப்பெரியாறு அணையில் 100 அடிக்கு மேல் தேங்கி நிற்கும் நீரை மட்டுமே பயன்படுத்த முடியும். அதற்கு கீழ் தேங்கி நிற்கும் நீரை பயன்படுத்த முடியாது. இந்த சூழ்நிலையில் தற்போது, அணை நீா்மட்டம் 115 அடியாக குறைந்தது. இந்நிலையில் தேனி மாவட்டத்தின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்வதற்காக அணையில் இருந்து விநாடிக்கு 100 கன அடி நீா் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நீரானது லோயா் கேம்பிலிருந்து உத்தமபாளையம், சின்னமனூரைக் கடந்து சீலையம்பட்டிக்கு வரும்போது வற்றி வடு விடுகிறது.

துா்நாற்றம்: உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றின் ஞானாம்பிகை கோயில் படித்துறைப்பகுதியில் தேங்கியுள்ள ஆற்று நீரில் மீன்கள் இறந்து மிதக்கின்றன. இதனால் துா்நாற்றம் வீசி தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதாக என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com