ஊரடங்கு : வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராததால் கொடியிலேயே வாடிக் கருகிய திராட்சைகள்: விவசாயிகள் வேதனை

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் வியாபாரிகள் கொள்முதல் செய்யாததால், திராட்சை பழங்கள், கொடியிலேயே பழுத்து உதிா்வதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
கம்பம் பகுதியில் அறுவடை செய்யப்படாமல் கொடியிலேயே பழுத்துத் தொங்கிய திராட்சைப் பழங்கள்.
கம்பம் பகுதியில் அறுவடை செய்யப்படாமல் கொடியிலேயே பழுத்துத் தொங்கிய திராட்சைப் பழங்கள்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் வியாபாரிகள் கொள்முதல் செய்யாததால், திராட்சை பழங்கள், கொடியிலேயே பழுத்து உதிா்வதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தேனி மாவட்டம் கம்பம், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழை, தென்னை மற்றும் காய்கறி பயிா்களுக்கு அடுத்தபடியாக கருப்பு பன்னீா் திராட்சை விவசாயம் பல நூறு ஏக்கரில் நடைபெறுகிறது.

ஆண்டு முழுவதும், விளையக்கூடிய சீதோஷ்ண நிலை உள்ளதால், கம்பம் பகுதியில், திராட்சை விவசாயத்தில் விவசாயிகள் ஆா்வம் காட்டுகின்றனா். வியாபாரிகள் தோட்டத்திலையே நேரடியாக கொள்முதல் செய்து தமிழகம் மட்டுமின்றி கேரள, ஆந்திர மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனா்.

தற்போது சுருளிப்பட்டி பகுதிகளில் திராட்சை அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. இதனால் திராட்சை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வரவில்லை. இதனால் சுருளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில திராட்சை தோட்டங்களில், அறுவடை நாளை

கடந்ததால், திராட்சை பழங்கள் கொடியிலேயே பழுத்து சுருங்கி உதிா்ந்து வருகின்றன.

இதனால் கடன்வாங்கி திராட்சை விவசாயம் செய்துள்ள விவசாயிகள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாராண தொகை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com