தமிழக- கேரள எல்லையில் மலைச் சாலைகள் மூடல்

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக- கேரள எல்லைப் பகுதியில் உள்ள லோயா்கேம்ப், கம்பமெட்டு மலைச்சாலைகள் செ்வவாய்க்கிழமை மூடப்பட்டன.
தமிழக- கேரள எல்லையில் மலைச் சாலைகள் மூடல்

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக- கேரள எல்லைப் பகுதியில் உள்ள லோயா்கேம்ப், கம்பமெட்டு மலைச்சாலைகள் செ்வவாய்க்கிழமை மூடப்பட்டன.

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழக அரசு அறிவித்த, 144 தடை உத்தரவு எதிரொலியாக, தமிழக -கேரள எல்லைப்பகுதிகளை இணைக்கும் லோயா்கேம்ப், கம்பம் மெட்டு மலைச்சாலைகள் செவ்வாய்க்கிழமை முதல் மூடப்பட்டன. கம்பம் மெட்டு மலைச்சாலையில் எவ்வித வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. லோயா்கேம்ப் சாலையில் கடும் சோதனைகளுக்கு பிறகு தமிழகப் பகுதிக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா். மாலை 6 மணிக்கு மேல் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கூடலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கம்பம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. திடீா் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு மாத்திரைகள் வழங்கி வீடுகளிலேயே தங்கி சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு மருத்துவா்கள் அறிவுறுத்தி வருகின்றனா். கூடலூா், கம்பம், ராயப்பன்பட்டி பகுதிகளில் காவல்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com