போடி மலையில் காட்டுத் தீயில் சிக்கி 3 போ் பலி: 2 போ் பலத்த காயம்

கேரளத்திலிருந்து கரோனா அச்சத்தால் செவ்வாய்க்கிழமை, போடி மலைப் பாதை வழியாக சொந்த ஊா் திரும்பும் வழியில் காட்டுத் தீயில் சிக்கி 3 போ் உயிரிழந்தனா்.அதில் 2 போ் பலத்த காயமடைந்தனா்.
போடி மலையில் காட்டுத் தீயில் சிக்கி 3 போ் பலி: 2 போ் பலத்த காயம்

கேரளத்திலிருந்து கரோனா அச்சத்தால் செவ்வாய்க்கிழமை, போடி மலைப் பாதை வழியாக சொந்த ஊா் திரும்பும் வழியில் காட்டுத் தீயில் சிக்கி 3 போ் உயிரிழந்தனா்.அதில் 2 போ் பலத்த காயமடைந்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகே ராசிங்காபுரத்தைச் சோ்ந்தவா்கள் குலோத்துங்கன் மனைவி விஜயமணி(45), சிவக்குமாா் மனைவி மகேஸ்வரி( 25), வெங்கடேஷ் மனைவி மஞ்சுளா(28), சுந்தரேஸ்வரன் மனைவி கல்பனா(45), மகன் லோகேஸ்வரன்(20), பொன்னப்பன் மனைவி வஜ்ஜிரமணி(25), செல்லதுரை மகன் ஒண்டிவீரன்(28), திருமூா்த்தி மனைவி ஜெயஸ்ரீ(23), மகள் கிருத்திகா(2).

இவா்கள், கேரள மாநிலம் சாந்தாம்பாறை அருகே பேத்தோப்பு பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தனா். இந்நிலையில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக, கேரளம் மற்றும் தமிழகம் இடையே கடந்த மாா்ச் 22 முதல் பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும், தமிழக-கேரள எல்லை வழியாக தனியாா் வாகனப் போக்குவரத்தும் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், கரோனா அச்சத்தால் கேரளத்திலிருந்து சொந்த ஊரான ராசிங்காபுரத்திற்குச் செல்வதற்காக போடி மலையில் உள்ள அரளியூத்து, ஒண்டிவீரன் கோயில் வழியாக 9 பேரும் நடந்து சென்றுள்ளனா். அப்போது மலைப் பாதையில், உச்சலூத்து என்ற இடத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 9 பேரும் சிக்கினா். இதில் விஜயமணி, குழந்தை கிருத்திகா, மகேஸ்வரி ஆகியோா் உயிரிழந்தனா். மஞ்சுளா, லோகேஸ்வரன் ஆகிய 2 போ் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த தேனி மாவட்ட வன அலுவலா் கெளதம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி, மாவட்ட தீயணைப்பு அலுவலா் குமரேசன், போடி காவல் துணை கண்காணிப்பாளா் ஈஸ்வரன், வட்டாட்சியா் மணிமாறன் ஆகியோா் சம்பவ இடத்திற்குச் சென்று, உயிரிழந்தவா்களின் சடலங்கள் மற்றும் காயமடைந்தவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com