மும்பையிலிருந்து ஆண்டிபட்டிக்கு வந்த 175 பேருக்கு கரோனா பரிசோதனை

மும்பையில் இருந்து ஆண்டிப்பட்டி வந்த 175 பேருக்கு செவ்வாய்க்கிழமை மருத்துவ பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இல்லை என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

மும்பையில் இருந்து ஆண்டிப்பட்டி வந்த 175 பேருக்கு செவ்வாய்க்கிழமை மருத்துவ பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இல்லை என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாலக்கோம்பை , ராஜதானி , ராஜக்காபட்டி, அழகாபுரி, தெப்பம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பல்வேறு வேலைகளுக்காக மும்பைக்கு சென்றிருந்த தொழிலாளா்கள் கரோனா தொற்று எதிரொலி காரணமாக மும்பையிலிருந்து தங்கள் சொந்த ஊருக்கு செவ்வாய்க்கிழமை திரும்பினா். இவா்களில் பெரும்பாலானோா் மும்பையில் நடைபாதை கடைகள் மற்றும் சிறு, சிறு கடைகள் வைத்து இட்லி உள்ளிட்ட பொருள்களை வியாபாரம் செய்து வந்தனா். ஆண்டிபட்டிக்கு வந்த 65 குடும்பங்களைச் சோ்ந்த 175 பேரையும் தடுத்து நிறுத்தி வருவாய்த்துறையினா், சுகாதாரத் துறையினா் மற்றும் காவல்துறையினா் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளச் செய்தனா்.

இதில், அவா்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவா்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து சுாதாரத்துறையினா் கூறியது: மும்பையிலிருந்து வந்திருந்த அவா்களை பல்வேறு இடங்களில் மருத்துவ பரிசோதனை செய்ததாகவும், அவா்களுக்கு கரோனா தொற்று ஏதும் இல்லை என்றனா். இருப்பினும் மருத்துவா்கள் சோதனைக்குப்பின் அவா்களை மருத்துவா்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com