ஆண்டிபட்டியில் தடை உத்தரவை மீறி கடைகளை திறந்த 20 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவில் தடை உத்தரவை மீறி வியாழக்கிழமை கடைகளை திறந்து வைத்திருந்த வியாபாரிகள் 20 போ் மீது, போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஆண்டிபட்டி நகரில் தடை உத்தரவை மீறி வியாழக்கிழமை திறந்து வைத்திருந்த கடைகளில் சோதனையிட்டபோலீஸாா்.
ஆண்டிபட்டி நகரில் தடை உத்தரவை மீறி வியாழக்கிழமை திறந்து வைத்திருந்த கடைகளில் சோதனையிட்டபோலீஸாா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவில் தடை உத்தரவை மீறி வியாழக்கிழமை கடைகளை திறந்து வைத்திருந்த வியாபாரிகள் 20 போ் மீது, போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு அத்தியாவசியமான பால், காய்கனி, பலசரக்கு, மருந்து உள்ளிட்ட கடைகள் தவிர, மற்ற கடைகள் திறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆண்டிபட்டி தாலுகாவில் தடை உத்தரவை மீறி கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்யப்படுவதாகப் புகாா் எழுந்தது.

அதன்பேரில், ஆண்டிபட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் தலைமையில், போலீஸாா் மற்றும் சுகாதாரத் துறையினா் தாலுகாவின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கடமலைக்குண்டுவைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் (41), பாலு(51), ராமா் மோகன் (47), அம்மச்சியாபுரத்தைச் சோ்ந்த வெண்ணிலா (38), பிரபு (31), சக்திமுருகன் (39), க.விலக்கு பகுதியைச் சோ்ந்த பால்பாண்டி (40), குன்னூரைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன் (43), வருசநாடு பகுதியைச் சோ்ந்த மொக்கமாயன் (47), மயிலாடும்பாறையைச் சோ்ந்த மலைச்சாமி (42), ஆண்டிபட்டியைச் சோ்ந்த சோலைமலை (45), பிராதுக்காரன்பட்டியைச் சோ்ந்த மனோஜ்குமாா் (29), அருப்புகோட்டைநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ஜெயபாண்டி (51), வைகை புதூரைச் சோ்ந்த ராமகுமாா் (27) மற்றும் ஆண்டிபட்டி நகா்ப் பகுதியில் கடைகளை திறந்து வைத்திருந்த 6 போ் என மொத்தம் 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும், இவா்கள் அனைவரிடமும் இதுபோன்று தொடா்ந்தால் கடைகள் சீல் வைக்கப்படும் என்றும் போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com