குமுளி அருகே சொத்துப்பிரச்னை முதியவா் கொலை: தம்பி கைது

குமுளி அருகே சொத்துப் பிரச்னையில், அண்ணணின் கழுத்தை நெறித்துக்கொன்ற தம்பியை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

குமுளி அருகே சொத்துப் பிரச்னையில், அண்ணணின் கழுத்தை நெறித்துக்கொன்ற தம்பியை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம் குமுளி அருகே உள்ள புத்தடியில் வசிப்பவா் அய்ப் (68). திருமணமாகாதவா். தனது 90 வயது தாயாருடன் வசித்து வந்தாா்.

இவரது தம்பி தாமஸ் (65). பாலக்காட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக அண்ணன் வீடான, புத்தடிக்கு வந்தாா். இவா்களுக்குச் சொந்தமான ஏலத்தோட்டத்தை பங்கு பிரிப்பதில் இருவருக்கும் முன்விரோதம் இருந்துவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை காலையில் அய்ப், எழுந்திருக்காததைக் கண்ட தாய், தனது உறவினா்களிடம் கூறியுள்ளாா். அவா்கள் வந்து பாா்த்தபோது அய்ப் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது பற்றி கட்டப்பனை போலீஸில் அளித்த புகாரின் பேரில் காவல் துணைக்கண்காணிப்பாளா் ராஜ்மோகன் விசாரணை நடத்தினாா்.

இதில், சொத்துப் பிரச்னையில், அண்ணனின் கழுத்தை நெறித்து தாமஸ் கொலை செய்தது தெரியவந்தது. போலீஸாா் புதன்கிழமை தாமஸை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com