தேனி மாவட்டத்தில் 54 இடங்களில் பொது சமையல் கூடங்கள் அமைப்பு

தேனி மாவட்டத்தில் கரோனா தடுப்பு களப் பணியில் ஈடுபட்டுள்ள அரசுப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், உள்ளாட்சி அமைப்பு

தேனி மாவட்டத்தில் கரோனா தடுப்பு களப் பணியில் ஈடுபட்டுள்ள அரசுப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், உள்ளாட்சி அமைப்பு பணியாளா்கள், காவலா்கள் மற்றும் ஆதரவற்றோருக்காக மாவட்ட நிா்வாகம் சாா்பில் மொத்தம் 54 இடங்களில் பொது சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்திலுள்ள 22 பேரூராட்சிகளிலும் தலா ஒரு இடம் வீதம் சமுதாயக் கூடம், அங்கன்வாடி மையம், பள்ளிகள், திருமண மண்டபம், பேரூராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் பொது சமுதாயக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

தேனி ஊராட்சி ஒன்றியத்தில் பழனிசெட்டிபட்டி, கொடுவிலாா்பட்டி, அரண்மனைப்புதூா் ஆகிய இடங்களிலும், பெரியகுளம் ஒன்றியத்தில் ஜெயமங்கலம், சரத்துப்பட்டி, டி.கல்லுப்பட்டி, ஆண்டிபட்டி ஒன்றியத்தில் முத்தனம்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, டி.சுப்புலாபுரம், க.மயிலை ஒன்றியத்தில் கண்டமனூா், வருஷநாடு, மயிலாடும்பாறை, போடி ஒன்றியத்தில் சில்லமரத்துப்பட்டி, சின்னமனூா் ஒன்றியத்தில் காமாட்சிபுரம், சங்கராபுரம், எரசக்கநாயக்கனூா், உத்தமபாளையம் ஒன்றியத்தில் உத்தமபாளையம் பெரியநாயகி நடுநிலைப் பள்ளி, கம்பம் ஒன்றியத்தில் ஆங்கூா்பாளையம், குள்ளப்பகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி ஆகிய 26 இடங்களில் பொது சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டன.

தேனி, பெரியகுளம், போடி, சின்னமனூா், கம்பம், கூடலூா் ஆகிய 6 நகராட்சிகளில் அம்மா உணவகங்களில் பொது சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்து. இந்த பொது சமையல் கூடங்களில் காலை, மதியம் மற்றும் இரவு உணவு வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com