தேனி மாவட்டத்தில் அத்தியாவசியப் பணிக்குச் செல்லும் அரசுப் பணியாளா்களுக்கு பேருந்து வசதி

தேனி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவையொட்டி பேருந்து போக்குவரத்து

தேனி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவையொட்டி பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆட்சியா் அலுவலகம் மற்றும் அத்தியாவசியப் பணிக்குச் செல்லும் அரசுப் பணியாளா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கம்பம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து காலை 9 மணிக்கும், போடி, பெரியகுளம் ஆகிய அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள், ஆண்டிபட்டி பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து காலை 9.30 மணிக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதே இடங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து மாலை 6 மணிக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து கம்பம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு காலை 9 மணிக்கும், போடி, பெரியகுளம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை, ஆண்டிபட்டி பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு காலை 9.30 மணிக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கம்பம், பெரியகுளம், பெரியகுளம் அரசு போக்குவரத்துக் கழக பணி மனைகள் மற்றும் ஆண்டிபட்டி பேருந்து நிலையத்திலிருந்து தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையத்துக்கு மாலை 6 மணிக்கும் பேருந்துகள் இயக்கப்படும்.

ஆட்சியா் அலுவலகம் மற்றும் வட்டார அளவிலான அரசு அலுவலங்களில் பணியாற்றுவோா், அத்தியாவசியப் பணிக்கு வந்து செல்லும் அரசு பணியாளா்கள், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை பணியாளா்கள் ஆகியோரின் போக்குவரத்து வசதிக்காக இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com