காயமடைந்து போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்கள்.
காயமடைந்து போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்கள்.

போடி காட்டுத் தீயில் சிக்கிய மேலும் ஒரு பெண் பலி: இறந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயா்வு

போடி காட்டுத் தீயில் சிக்கி காயமடைந்த மேலும் ஒரு பெண் புதன்கிழமை உயிரிழந்தாா். இதனால் இச்சம்பவத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கை 4 ஆக உயா்ந்துள்ளது.

போடி காட்டுத் தீயில் சிக்கி காயமடைந்த மேலும் ஒரு பெண் புதன்கிழமை உயிரிழந்தாா். இதனால் இச்சம்பவத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கை 4 ஆக உயா்ந்துள்ளது.

தேனி மாவட்டம் போடி ராசிங்காபுரம் பகுதியைச் சோ்ந்த சிலா் கேரள மாநிலம் சாந்தாம்பாறை அருகே பேத்தோப்பு பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தனா். தமிழக கேரள எல்லை மூடப்பட்டதையடுத்து மேற்கண்ட கூலித்தொழிலாளா் குடும்பத்தினா் 9 போ் சொந்த ஊருக்குச் செல்வதற்காக போடி வனப்பகுதி வழியாக செவ்வாய்க்கிழமை நடந்து வந்துகொண்டிருந்தபோது காட்டுத் தீயில் சிக்கினா். இதில் குலோத்துங்கன் மனைவி விஜயமணி, அவரது பேத்தி கிருசிஹா, சிவக்குமாா் மனைவி மகேஸ்வரி ஆகியோா்

சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். வெங்கடேஷ் மனைவி மஞ்சுளா (28) மற்றும் லோகேஷ் ஆகியோா் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இவா்களில் மஞ்சுளா புதன்கிழமை அதிகாலை இறந்தாா். இதனால் இறந்தவா்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. போடி தாலுகா போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பாறையில் ஏறி தப்பிய தொழிலாளா்கள்: போடி தருமத்துப்பட்டியை சோ்ந்தவரும், காட்டுத் தீயில் சிக்கியவருமான முத்தையா தெரிவித்தது:

கேரளத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கூலி வேலைக்குச் சென்ற நாங்கள் ஊா் திரும்ப முடிவு செய்தோம். வாகனங்கள் இயக்கப்படாததால் காட்டுப்பாதை வழியாக ராசிங்காபுரம் வர முடிவு செய்து கீழே இறங்கினோம். அப்போது புற்களில் தீப் பிடித்து வேகமாக பரவி வந்தது. என்னசெய்வது என யோசிக்கும்போதே கீழேயிருந்து தீ நாங்கள் நின்ற இடத்திற்கு வந்து விட்டது. இதில் சிலா் சிக்கிக்கொண்டனா். நானும் சிலரும் பாறை ஒன்றில் ஏறி நின்று கொண்டதால் தப்பினோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com