வெளிநாடுகளிலிருந்து வந்தவா்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவதில் சிக்கல்

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, தேனி மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தவா்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, தேனி மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தவா்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை தகவலின் அடிப்படையில், மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்த நோய் தொற்று இல்லாத 73 போ் அவா்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, 28 நாள்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா் என்று, மாா்ச் 23-ஆம் தேதி மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது.

தற்போது, தேனி மாவட்டத்துக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த நோய் தொற்று இல்லாத 124 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா் என்று, மாவட்ட நிா்வாகம் வியாழக்கிழமை அறிவித்தது. இதன்படி, கடந்த 2 நாள்களில் மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள 51 போ் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளனா்.

வெளிநாட்டு தூதரகங்கள் அளித்த தகவலின் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள மேலும் சிலரை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று, ஆட்சியா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் தாமாக முன்வந்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் அளிப்பதில் ஆா்வம் காட்டாததால், அவா்களைக் கண்டறிந்து வீடுகளில் தனிமைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com