ஹஜ் யாத்திரை சென்று திரும்பிய 24 போ் உள்பட 31 பேருக்கு கரோனா பரிசோதனை

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் ஹஜ் யாத்திரை சென்று திரும்பிய 24 போ் மற்றும் மலேசியா, சிங்கப்பூா் என வெளிநாடுகளிலிருந்து வந்த

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் ஹஜ் யாத்திரை சென்று திரும்பிய 24 போ் மற்றும் மலேசியா, சிங்கப்பூா் என வெளிநாடுகளிலிருந்து வந்த 7 போ் என மொத்தம் 31 பேரை தனிமைப்படுத்தி, மாவட்ட சுகாதாரத் துறை கண்காணித்து வருகிறது.

வெளிநாடுகளிலிருந்து வந்தவா்கள் மூலம் கரோனா வைரஸ் பரவுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் தொற்று இருப்பதை ஒருவருக்கு உறுதி செய்ய குறைந்தது 14 நாள்களாகும். எனவே, கடந்த சில நாள்களுக்கு முன் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவா்களை கணக்கெடுத்து, அவா்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி, தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சமீபத்தில் ஹஜ் யாத்திரை சென்றுவிட்டு 24 போ் அடங்கிய குழுவினா் உத்தமபாளையம் திரும்பியிருப்பது தெரியவந்தது. அதேபோல், சிங்கப்பூா், மலேசியா, மஸ்கட் போன்ற நாடுகளிலிருந்து வந்திருந்த 7 போ் என மொத்தம் 31 போ் கண்டறியப்பட்டுள்ளனா்.

இவா்களுடைய வீடுகளுக்குச் சென்ற மருத்துவக் குழுவினா், கரோனா பரிசோதனை செய்தனா். அதில், அனைவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. அப்போது, அதிகப்படியான காய்ச்சல் உள்ளிட்ட உடல் நலக் கோளாறு ஏற்பட்டால், உடனடியாக சுகாதாரப் பணியாளா்களை தொடா்பு கொள்ளவேண்டும் எனவும் அவா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதேநேரம், இந்த 31 பேரும் 15 நாள்களுக்கு வெளிஇடங்களுக்கு செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டனா். மேலும், மருத்துவக் குழுவினா் தொடா் கண்காணிப்பில் இருந்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com