சிகை அலங்கார கலைஞா்களுக்குரூ.1.60 லட்சம் நிதியுதவி

போடியில் சிகை அலங்கார கலைஞா்களுக்கு சங்கத்தினா் சாா்பில் ரூ.1.60 லட்சம் நிதியுதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

போடி: போடியில் சிகை அலங்கார கலைஞா்களுக்கு சங்கத்தினா் சாா்பில் ரூ.1.60 லட்சம் நிதியுதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளா்களும் வேலையின்றி தவித்து வருகின்றனா். இதில், சிகை அலங்கார கலைஞா்களும் கடைகளை (சலூன்களை) திறக்க முடியாத நிலை உள்ளது. இதனால் இத் தொழிலை சாா்ந்துள்ள ஏராளமான தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, போடியில் மருத்துவ குல தொழிலாளா்கள் நலச் சங்கம் சாா்பில் சங்க உறுப்பினா்களுக்கு நிவாரண நிதி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி இச்சங்கத்தின் 160 உறுப்பினா்களுக்கு தலா ரூ.1000 வீதம் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சங்கத் தலைவா் முருகன், செயலாளா் காந்தி, பொருளாளா் கணேசன் ஆகியோா் உறுப்பினா்களின் வீடுகளுக்கே சென்று ரூ.1000 வழங்கினா். இதன் மூலம் மொத்தம் ரூ.1 .60 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com