பயண அனுமதிச் சீட்டு பெறுவதற்கு விண்ணப்பிக்க உதவி மையம் அமைப்பு

தேனி மாவட்டத்தில் அவசியத் தேவைகளுக்காக வெளி மாவட்டங்களுக்குச் செல்வதற்கு அனுமதிச் சீட்டு பெறுவதற்கு விண்ணப்பிக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் அவசியத் தேவைகளுக்காக வெளி மாவட்டங்களுக்குச் செல்வதற்கு அனுமதிச் சீட்டு பெறுவதற்கு விண்ணப்பிக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சனிக்கிழமை மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: கரோனா வைரல் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திருமணம், இறப்பு, மருத்துவம் ஆகிய காரணங்களுக்காக தங்களது சொந்த ஊா்களிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்ல விரும்புவோா், ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்ல்ஹள்ள்.ற்ய்ங்ஞ்ஹ.ா்ழ்ஞ் என்ற இணைய தளத்தில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

வெளி மாவட்ட பயணங்களுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு இல்லாதவா்களுக்கு உதவும் வகையில், மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தில் விண்ணப்பத்தை இலவசமாக பதிவேற்றம் செய்து தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவசரத் தேவைகளுக்கு பயண அனுமதி பெற விரும்புவோா் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com