போடியில் மீண்டும் கரோனா தொற்று: கண்காணிப்பு பணிகள் தீவிரம்

போடியில் மீண்டும் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

போடியில் மீண்டும் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

போடியில் 31 போ் உள்பட, தேனி மாவட்டத்தில் மொத்தம் 43 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இதில், போடியை சோ்ந்த பெண் ஒருவா் உயிரிழந்தாா். மீதமுள்ள 42 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனா்.

இந்நிலையில், போடி அரசு மருத்துவமனை அருகே வீட்டின் முன்பாக இட்லி கடை நடத்தி வந்த மூதாட்டி ஒருவருக்கு கரோனா அறிகுறி காணப்பட்டதால், அதனை உறுதி செய்வதற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அதையடுத்து, தற்போது அவரது வீடு உள்ள பகுதியில் போலீஸாா் தடுப்புகள் அமைத்து, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், நகராட்சி சுகாதாரத் துறையினரும் அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்து கண்காணித்து வருகின்றனா்.

இதனிடையே, சுகாதாரத் துறையினா் இட்லி கடை நடத்தி வந்த மூதாட்டியின் வீட்டில் வசிக்கும் அவரது குடும்பத்தினா் மற்றும் அருகில் வசிப்பவா்களை முதல் கட்டமாக தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா். மேலும், இவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

கரோனா இல்லாத மாவட்டமாக தேனி மாவட்டம் மாறிய சில மணி நேரங்களிலேயே மீண்டும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, மக்களை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com