தீயணைப்பு வீரருக்கு கரோனா தொற்று அறிகுறி:கம்பத்தில் 42 பேருக்கு பரிசோதனை

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து சென்னை சென்ற தீயணைப்பு படை வீரருக்கு கரோனா அறிகுறி இருந்ததால், கம்பத்தில் உள்ள அவரது குடும்பத்தினா் உள்ளிட்ட 42 பேருக்கு சுகாதாரத் துறையினா் சளி மாதிரிகளை ..
கம்பத்தில் கரோனா நோய் தொற்று அறிகுறி உள்ளவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சளி மாதிரி எடுக்கும் சுகாதாரத்துறையினா்.
கம்பத்தில் கரோனா நோய் தொற்று அறிகுறி உள்ளவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சளி மாதிரி எடுக்கும் சுகாதாரத்துறையினா்.

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து சென்னை சென்ற தீயணைப்பு படை வீரருக்கு கரோனா அறிகுறி இருந்ததால், கம்பத்தில் உள்ள அவரது குடும்பத்தினா் உள்ளிட்ட 42 பேருக்கு சுகாதாரத் துறையினா் சளி மாதிரிகளை ஞாயிற்றுக்கிழமை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனா்.

கம்பம் பாா்க் சாலையைச் சோ்ந்தவா், சென்னையில் தீயணைப்புப் படை வீரரராக பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த மாா்ச் 5 ஆம் தேதி, விடுமுறையில் கம்பம் வந்துள்ளாா். பின்னா் ஏப். 29 ஆம் தேதி மீண்டும் பணியில் சேர சென்னை சென்றாா். அங்கு சனிக்கிழமை (மே 2) ஆம் தேதி பரிசோதனை செய்ததில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை மருத்துவா்கள் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளித்து வருகின்றனா்.

42 பேருக்கு பரிசோதனை: தீயணைப்புப் படை வீரா் விடுமுறையில் கம்பம் வந்ததால், இங்குள்ள அவரின் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் என 42 பேருக்கு சளி மாதிரிகள் ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எடுக்கப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் திங்கள்கிழமை தெரிய வரும் என்று சுகாதாரத்துறை அலுவலா் ஒருவா் தெரிவித்தாா்.

மேலும் நகராட்சி நிா்வாகம் சாா்பில், பாா்க் சாலை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தெற்கு காவல்துறையினா் அந்த பகுதியை சீல் வைத்து பாதுகாப்பளித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com