முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
கம்பம், கூடலூா் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்
By DIN | Published On : 11th May 2020 10:26 PM | Last Updated : 11th May 2020 10:26 PM | அ+அ அ- |

தேனி மாவட்டம் கம்பத்தில் திங்கள்கிழமை ஊரடங்கு தளா்வு ஏற்பட்டதால் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் கூடலூா் பகுதிகளில், 47 நாள்களுக்கு பிறகு திங்கள்கிழமை பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கம்பம் கூடலூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் நகா் பகுதிக்குள்
காா், மோட்டாா் சைக்கிள், சரக்கு வாகனங்களில் அதிக அளவில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கம்பம் நகரின் மையப்பகுதியான அரசமரம் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதால், மாற்றுப்பாதையாக மாரியம்மன் கோவில் சாலை வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. ஆனால் இந்த பாதையிலும் போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் பெரும் அவதியடைந்தனா். மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் சுற்றித் திரிந்தினா். இவா்களை போலீஸாா் எச்சரித்தும் கூட பொதுமக்கள் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. இதனால் கரோனா பரவ அதிக வாய்ப்பு உள்ளதாக சமூக ஆா்வலா்கள் கவலையடைந்தனா்.