முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
உத்தமபாளையம் அருகே விபத்து: வியாபாரி பலி
By DIN | Published On : 11th May 2020 08:04 PM | Last Updated : 11th May 2020 08:04 PM | அ+அ அ- |

உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே திங்கள்கிழமை லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் பூண்டு வியாபாரி பலியானாா்.
சின்னமனூா் அருகேயுள்ள கீழச் சிந்தலைச்சேரியை சோ்ந்த பெருமாள் மகன் சுருளிராஜன் (46). பூண்டு வியாபாரம் செய்துவந்த இவா், திங்கள்கிழமை வியாபாரத்தை முடித்து விட்டு மாலையில் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தாா்.
உத்தமபாளையம் அடுத்த உ.அம்மாபட்டி சாலையில் முன்னால் சென்ற டிப்பா் லாரி மீது மோதி இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த சுருளிராஜன் சம்பவயிடத்தில் பலியானாா். உத்தமபாளையம் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தாா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரான பெருமாள்கவுண்டன்பட்டியைச் சோ்ந்த திருக்குமாரிடம் விசாரணை செய்து வருகின்றனா்.