முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
பெரியகுளம் பகுதியில் குவிந்த பொதுமக்கள் - நோய் பரவும் அபாயம்
By DIN | Published On : 11th May 2020 08:27 PM | Last Updated : 11th May 2020 08:27 PM | அ+அ அ- |

பெரியகுளம் கடைவீதியில் பொருட்களை வாங்க குவிந்த பொதுமக்கள்
பெரியகுளம்: டீக்கடைகள் மற்றும் பலசரக்குகடைகள் உட்பட 23 வகைப்படுத்தப்பட்ட தனிக்கடைகள் திறந்ததையடுத்து ஏராளமான பொதுமக்கள் சாலையில் குவிந்ததால் நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவித்தனா். மே.11ம் தேதி திங்கட்கிழமையன்று டீக்கடை மற்றும் உணவு விடுதி, பலசரக்குகடைகள் உட்பட 23 கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது. மேலும் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செல்போன் எண்ணில் முன்பதிவு செய்து பொதுமக்கள் வெளியேற வேண்டும். அதாவது மூன்று நாட்களுக்கு ஓரு முறை 3 மணி நேரம் அனுமதி பெற்று மட்டும் வெளியேறவேண்டும் என அறிவித்து இருந்தது. ஆனால் அதனை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வில்லை. மேலும் டீக்கடைகளில் வழக்கம்போல் கண்ணாடி டம்ளரில் டீ விற்பனை நடைபெற்றது. பலசரக்கு மற்றும் பல்வேறு கடைகளில் முறையாக சமூகவிலகலலை முறையாக பின்பற்றவில்லை. இதனால் பெரியகுளம் பகுதியில் கூட்ட நெரில் அதிகரித்தது.இதனால் நோய் பரவல் அதிகரிக்கும் என சமூக ஆா்வலா்கள் அச்சத்தை தெரிவித்துள்ளனா். பெரியகுளத்தை சோ்ந்த சமூக ஆா்வலா் ப.சீனிவாசன் தெரிவித்ததாவது...... கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதியில் கடைகள் திறக்கக்கூடாது எனவும் பெரியகுளம் பகுதியில் பொது இடங்களில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்து இருந்தது. ஆனால் பெரியகுளம் பகுதியில் முறையாக கடைபிடிக்கவில்லை . மேலும் கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தியிருந்த நிலையில் பொதுமக்கள் அச்சமற்ற நிலையில் கண்ட,கண்ட இடங்களில் எச்சிலை துப்பிவருகின்றனா். இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படும் உருவாகியுள்ளது என்றாா்.