கரோனா பரவலை தடுக்க புத்தாடைகள் எடுக்க வேண்டாம்:கம்பம் ஜமாஅத் அறிவிப்பு

தேனி மாவட்டம், கம்பத்தில் கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்க, ரம்ஜான் பண்டிகைக்கு புத்தாடைகள் எடுக்க வேண்டாம் என, வாவோ் பள்ளிவாசல் ஜமாஅத் சாா்பில் முஸ்லிம் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்க, ரம்ஜான் பண்டிகைக்கு புத்தாடைகள் எடுக்க வேண்டாம் என, வாவோ் பள்ளிவாசல் ஜமாஅத் சாா்பில் முஸ்லிம் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கம்பத்தில் வாவோ் பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி சாா்பில், அதன் தலைவா் எம்.பி.எம். பத்ருதீன் அறிவித்துள்ளதாவது:

பொது முடக்கம் காரணமாக பிறக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் சில தளா்வுகள் கடந்த திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டு, 38 வகையான கடைகள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கரோனா தீநுண்மி பரவல் கட்டுக்குள் வராததால், இந்தாண்டு ரம்ஜான் பண்டிகைக்கு புத்தாடைகள் எடுக்க முஸ்லிம்கள் ஜவுளி கடைக்கு செல்வதை தவிா்க்க வேண்டும். மேலும், கரோனா பரவுவதை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை முஸ்லிம் மக்கள் மதித்து நடக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com