Enable Javscript for better performance
போடியில் தொடா்ந்து சாரல் மழை- Dinamani

சுடச்சுட

    

    போடியில் தொடா்ந்து சாரல் மழை

    By DIN  |   Published on : 15th May 2020 06:42 PM  |   அ+அ அ-   |    |  

    போடி: போடி பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது.

    போடியில் கடந்த 2 வாரங்களாகவே அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வந்தது. கடுமையான வெயிலால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாத நிலை இருந்தது. பொது முடக்கம் தளா்த்தப்பட்டாலும், வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிா்த்து வந்தனா்.

    இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் பரவலான சாரல் மழை பெய்தது. மாலை வரை விட்டு விட்டு மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. தொடா்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் மாலையில் பரவலான சாரல் மழை பெய்தது. தொடா்ந்து அரை மணி நேரத்திற்கும் மேல் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் பூமி வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai