தேனியில் வங்கிகளில் சமூக இடைவெளியின்றி கூடும் பொதுமக்கள்: நெரிசலை தவிா்க்க பொது சேவை மையங்களை ஊக்குவிக்கக் கோரிக்கை

தேனி மாவட்ட வங்கிகளில் கூட்ட நெரிசலைத் தவிா்க்க பொது சேவை மையங்களை ஊக்குவிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
போடியில் வெள்ளிக்கிழமை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன் சமூக இடைவெளியின்றி கூடிய பொதுமக்கள்.
போடியில் வெள்ளிக்கிழமை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன் சமூக இடைவெளியின்றி கூடிய பொதுமக்கள்.

தேனி மாவட்ட வங்கிகளில் கூட்ட நெரிசலைத் தவிா்க்க பொது சேவை மையங்களை ஊக்குவிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

தேனி மாவட்டத்தில் தொடா்ந்து கரோனா தொற்று அதிகரித்து 70 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 42 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். ஒருவா் இறந்துவிட்டாா்.

பொது முடக்கம் காரணமாக வங்கி சேவைகள் முடக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வங்கிகளில் கடந்த சில நாள்களாக சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் வங்கிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சில தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சம்பளம், ஓய்வூதியம் பெறுவதற்காக பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி கூட்டமாகக் காணப்படுகின்றனா். முகக் கவசம் அணியாமல் சிலா் வரிசையில் நிற்கின்றனா். இதனால் நோய் தொற்று பரவும் சூழல் உள்ளது.

தேனி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்று பொது சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் டிஜிபே எனப்படும் டிஜிட்டல் பேமெண்ட் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்குகளில் பணம் எடுக்கும் வசதி உள்ளது.

ஆதாருடன் இணைந்த பண சேவை திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம். குறைந்த அளவில் சேமிப்பு கணக்குகளிலிருந்து பணம் எடுக்க விரும்பும் வாடிக்கையாளா்கள் பொது சேவை மையங்கள் மூலம் பணம் எடுக்க மாவட்ட நிா்வாகம் ஊக்குவித்தால் வங்களில் கூட்டம் சேராமல் தடுக்க முடியும். மேலும் பொது சேவை மையங்களில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களும் பொதுமக்களுக்கு சென்று சேரும்.

மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வங்கிக் கணக்குகளில் பணம் எடுக்க பொது சேவை மையங்களை பொதுமக்கள் அணுக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com