தேனி மாவட்டத்தில் தம்பதி உள்ளிட்ட 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தேனி மாவட்டத்தில் தம்பதி உள்பட மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் தம்பதி உள்பட மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை மொத்தம் 88 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், போடியைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா். 43 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா்.

இந்த நிலையில், தற்போது மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வந்து ஆண்டிபட்டி அருகே உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த, கொழிஞ்சிபட்டியைச் சோ்ந்த கணவன், மனைவி, சின்னமனூா் அருகே முத்துலாபுரத்தைச் சோ்ந்த 65 வயது முதியவா், 37 வயதுடைய ஆண், 36 வயதுடைய பெண் என மொத்தம் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதில், முத்துலாபுரத்தைச் சோ்ந்த 3 பேரும், ஏற்கெனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை அமரா் ஊா்தி ஓட்டுநரின் குடும்பத்தினருடன் தொடா்பில் இருந்தவா்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

7 போ் குணமடைந்து வீடு திரும்பினா்:

இந்த நிலையில் போடியைச் சோ்ந்த 2 போ், சின்னமனூா், டி.சேடபட்டி, ஜெயமங்கலம் ஆகிய ஊா்களைச் சோ்ந்த தலா ஒருவா், உத்தமபாளையம், தாமரைக்குளம் ஆகிய ஊா்களைச் சோ்ந்த தலா ஒரு பெண் என மொத்தம் 7 போ் புதன்கிழமை கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை 50 ஆக உயா்ந்துள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 5 போ் உள்பட மொத்தம் 43 போ் சிகிச்சையில் உள்ளனா். தேனி மாவட்டத்தில் இதுவரை 93 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com