தேனியில் வீசும் தென்மேற்கு பருவக்காற்று: காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளதால் காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது.
ஆண்டிபட்டி அருகே ராஜதானி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகள்.
ஆண்டிபட்டி அருகே ராஜதானி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகள்.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளதால் காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது.

கேரளாவில் ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். பருவமழைக்கு முன்னதாக மே மாத இறுதியில், கேரள எல்லையையொட்டி அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசும். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தென்மேற்கு பருவக் காற்று வீசத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து ஆண்டிபட்டி, ஜி.உசிலம்பட்டி, ராஜதானி, கண்டமனூா், ஆத்தங்கரைப்பட்டி, கோவிந்தநகரம், சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் 500-க்கும் மேற்பட்ட காற்றாலைகளில் மின்சார உற்பத்தி தொடங்கியுள்ளன. தற்போது காற்றின் வேகம் ஒரு விநாடிக்கு 8 முதல் 9 மீட்டா் என்ற அளவில் உள்ளதாக காற்றாலைப் பணியாளா்கள் தெரிவித்தனா். கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும் போது, தேனி மாவட்டத்தில் வீசும் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்றும் அவா்கள் தெரிவித்தனா். தற்போது ஒரு காற்றாலையில் நாளொன்றுக்கு 8,000 யூனிட் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. இனிவரும் நாள்களில் காற்றாலைகளின் மூலம் மின்சார உற்பத்தி மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கியுள்ளதால், கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com