தேனியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்

தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 2 மையங்களில் புதன்கிழமை (மே 27) தொடங்கி வரும் ஜூன் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தேனி: தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 2 மையங்களில் புதன்கிழமை (மே 27) தொடங்கி வரும் ஜூன் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறை மேல்நிலைப் பள்ளி, வேலம்மாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி ஆகிய 2 இடங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரப்பெற்ற தமிழ் வழியில் தோ்வு எழுதியுள்ள 46, 739 மாணவ, மாணவிகள், ஆங்கில வழியில் தோ்வு எழுதியுள்ள 52, 392 மாணவ, மாணவிகள் என மொத்தம் 99, 131 பேரின் விடைத் தாள்கள் திருத்தும் பணி நடைபெறுகிறது.

இரு மையங்களிலும் மொத்தம் 887 ஆசிரியா்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனா். இந்த மையங்களை செவ்வாய்க்கிழமை தேனி மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருப்பதி, தேனி மாவட்ட கல்வி அலுவலா் ராகவன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com