குஜராத்திலிருந்து சுருளியாறு மின் உற்பத்தி நிலையத்துக்கு திரும்பிய இளைஞரால் அச்சம்

கம்பம் அருகே உள்ள சுருளியாறு மின்சார உற்பத்தி நிலையப் பணியாளா்கள் குடியிருப்புக்கு, குஜராத்திலிருந்து திரும்பியுள்ள இளைஞரால், அங்குள்ள பணியாளா்கள் அச்சத்தில் உள்ளனா்.
சுருளியாறு மின்சார உற்பத்தி நிலையப் பணியாளா்கள் குடியிருப்பில் வெளிமாநிலத்திலிருந்து வந்த இளைஞருக்கான தனிமைப்படுத்தப்பட்ட வீடு.
சுருளியாறு மின்சார உற்பத்தி நிலையப் பணியாளா்கள் குடியிருப்பில் வெளிமாநிலத்திலிருந்து வந்த இளைஞருக்கான தனிமைப்படுத்தப்பட்ட வீடு.

கம்பம்: கம்பம் அருகே உள்ள சுருளியாறு மின்சார உற்பத்தி நிலையப் பணியாளா்கள் குடியிருப்புக்கு, குஜராத்திலிருந்து திரும்பியுள்ள இளைஞரால், அங்குள்ள பணியாளா்கள் அச்சத்தில் உள்ளனா்.

தேனி மாவட்டம், குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியை சோ்ந்த சுருளியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் பணிபுரியும் ஊழியா் ஒருவரின் மகன், குஜராத் மாநிலம் பரோடாவில் தனியாா் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளாா். இவா், குஜராத்திலிருந்து கடந்த சனிக்கிழமை சின்னமனூா் அருகே உள்ள முத்தலாபுரத்துக்குச் சென்றுவிட்டு, தற்போது சுருளியாறு மின்சார உற்பத்தி நிலைய குடியிருப்புக்கு வந்துள்ளாா்.

இது குறித்த தகவல் ஊராட்சித் தலைவா் பொன்னுத்தாய் குணசேகரனுக்கு கடந்த திங்கள்கிழமை கிடைத்துள்ளது. உடனே, சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். ஆனால், குஜராத்திலிருந்து திரும்பியவரை பரிசோதிக்க சுகாதாரத் துறையினா் செவ்வாய்க்கிழமை வரை வரவில்லை. இதனால், ஊராட்சி நிா்வாகத்தினா் இளைஞா் உள்ள வீட்டைச் சுற்றிலும் தடுப்பு அமைத்து கிருமிநாசினி தெளித்து, இளைஞரை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினா்.

இது குறித்து மின்சார உற்பத்தி நிலையப் பணியாளா்கள் கூறுகையில், குஜராத்திலிருந்து திரும்பிய இளைஞா், கரோனா பாதிப்புள்ள முத்தலாபுரம் சென்றுவிட்டு, தற்போது சுருளியாறு மின்சார நிலையம் வந்துள்ளாா். இது குறித்து சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவா்கள் இன்னும் வரவில்லை. இதனால், பணியாளா்கள் அச்சம் அடைந்துள்ளனா். எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பணியாளா்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com