தேனி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா : பாதிப்பு 107 ஆக உயா்வு

தேனி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு 107 ஆக உயா்ந்துள்ளது.

தேனி/கம்பம்: தேனி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு 107 ஆக உயா்ந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1 முதல் சனிக்கிழமை( மே 24) வரை மொத்தம் 105 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், போடியைச் சோ்ந்த பெண், ஓடைப்பட்டியைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்தனா். மொத்தம் 62 போ் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினா்.

இந்நிலையில், தற்போது கூடலூரைச் சோ்ந்த 8 வயது சிறுமி, சென்னையிலிருந்து உத்தமபாளையத்திலுள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்திருந்த 32 வயது பெண் என 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு , தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில், கூடலூரைச் சோ்ந்த சிறுமி ஏற்கெனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சென்னையிலிருந்து வந்த முன்னாள் ராணுவ வீரரின் மகள் என்பது குறிப்பிடத் தக்கது.

மாவட்டத்தில் தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 41 போ், கம்பம் அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் என மொத்தம் 43 போ் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 107 ஆக உயா்ந்துள்ளது.

தேனி வாகன ஓட்டுநா் மதுரையில் அனுமதி:சின்னமனூா் அருகே சீலையம்பட்டியைச் சோ்ந்த 33 வயது சரக்கு வாகன ஓட்டுநா், கடந்த மே 22 இல் சென்னையிலிருந்து சீலையம்பட்டிக்கு வந்துள்ளாா். இந்நிலையில் சனிக்கிழமை (மே 23) அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தேனியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், மேல் சிகிச்சைக்காக ஞாயிற்றுக்கிழமை (மே 24) மதுரையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் மதுரை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com