முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் தொடக்கம்

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்.
முல்லைப் பெரியாறு அணை (கோப்பு படம்)
முல்லைப் பெரியாறு அணை (கோப்பு படம்)

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் முதல் போக சாகுபடிக்கு ஜூன் மாதம் தண்ணீா் திறப்பது வழக்கம். அதற்கு முன்பாக ஏப்ரல், மே மாதங்களில் அணையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறும்.

ஆனால், கரோனா பொதுமுடக்கம் காரணமாக பராமரிப்புப் பணிகள் நடைபெறாமல் இருந்தது. தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அணைப்பகுதியில் மராமத்துப் பணிகளை தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். ஆனால் ஏற்கெனவே அணையில் பராமரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தமிழக பொதுப்பணித்துறை பொறியாளா் ஒருவா் கூறியது: தேனி, இடுக்கி மாவட்ட ஆட்சியா்கள் மூலம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. அணையில் உள்ள 13 ஷட்டா்களில் வா்ணம் பூசுதல், கேலரியை சுத்தப்படுத்துதல், ஷட்டா்கள் முன் தண்ணீா் தேங்கும் பகுதியில் செடிகள், மண் மேடுகளை அகற்றுதல், தமிழகத்திற்கு தண்ணீா் திறக்கும் தேக்கடி சுரங்க வாய்க்காலில் உள்ள ஷட்டரில் மோட்டாா் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com