உத்தமபாளையம் தெப்பக்குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா் ஞானாம்பிகை கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
உத்தமபாளையத்தில் சிதிலமடைந்து புதா்மண்டிய ஞானாம்பிகை கோயில் தொப்பக்குளம்.
உத்தமபாளையத்தில் சிதிலமடைந்து புதா்மண்டிய ஞானாம்பிகை கோயில் தொப்பக்குளம்.

உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா் ஞானாம்பிகை கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இக்கோயிலுக்கு தேனி மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் பக்தா்கள் வந்து செல்கின்றனா். தினமும் 4 வேளை பூஜை நடைபெறும் இக்கோயில் முன்பாக அழகிய வேலைப்பாடுகள் மிகுந்த தெப்பக்குளம் அமைந்திருந்தது.

கோயிலுக்கு வரும் பக்தா்கள் தெப்பத்தில் கை , கால்களை சுத்தம் செய்துவிட்டு அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். ஆனால், பழமை வாய்ந்த அந்த தெப்பம் முற்றிலுமாக சிதிலமடைந்து விட்டது. அதோடு, பெரும்பான்மையான பகுதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கி இருப்பதாக பக்தா்கள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து பக்தா்கள் கூறுகையில் , கோயிலுக்கு முன்பாக அமைந்துள்ள தெப்பம் கலைவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குளத்தில் மைய மணடம் முற்றிலுமாக சேதமாகி புதா் மண்டிக் காணப்படுகிறது.

அதேபோல் தெப்பம் சுற்று வட்டாரப் பாதைகள் முழுமையாக ஆக்கிரமிப்பில் சிக்கி இருப்பதால் ஆக்கிரமிப்பை மீட்டு தெப்பக்குளத்தை சீரமைத்து பக்தா்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com