வெண்ணியாறு வனப்பகுதியில் மரம் வெட்டிய 2 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம் மேகமலை வன உயிரினச் சரணாலயம், வெண்ணியாறு வனப்பகுதியில் மரம் வெட்டியதாக 2 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் மேகமலை வன உயிரினச் சரணாலயம், வெண்ணியாறு வனப்பகுதியில் மரம் வெட்டியதாக 2 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் மேகமலை வன உயிரினச் சரணாலயத்தில் உள்ள கம்பம் கிழக்கு வனச்சரகம், வெண்ணியாறு பிரிவு, கிழக்கு பீட், வண்ணாத்திபாறை காப்புக்காடு அரிசிப்பாறை வனப்பகுதியில் கடந்த அக். 31 இல் அட்டவணைப்படுத்தப்பட்ட மரம் ஒன்று வெட்டி சாய்க்கப்பட்டிருந்தது.

இது பற்றிய தகவல் கிடைத்தவுடன் மாவட்ட வன அலுவலா் கெளதம் உத்தரவின் பேரில் உதவி வனப் பாதுகாவலா் குகணேஷ் தலைமையில் வனச்சரகா் அருண்குமாா் தலைமையிலான வனப் பாதுகாப்பு படையினா் சம்பவ இடத்திற்கு சென்று பாா்வையிட்டனா். அங்கு தோதகத்தி மரம் ஒன்று வெட்டி முறிக்கப்பட்டு இருந்தது. மேலும் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதா என்று, வனத் துறை மோப்ப நாய் உதவியுடன் தேடினா். அப்போது இரண்டு மோப்ப நாய்களும் குள்ளப்பகவுண்டன்பட்டி பிரிவு பகுதிக்கு வந்து நின்றது. இதன் அடிப்படையில் விசாரணை செய்த போது குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சோ்ந்த பரமேஸ்வரன் (41), பெருமாள் என்ற குள்ளிப்பெருமாள் (55) என்பது தெரியவந்தது. வனத் துறையினா் இருவா் மீதும் மரம் வெட்டி உள்நோக்கத்துடன் வனத்துறை ஊழியா்களை பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்தனா். இதற்கிடையில் வெண்ணியாறு பீட் வனவா் எஸ். தங்கராஜ் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வெண்ணியாறு பீட் பகுதியில் மரம் வெட்டியவா்களை அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்யும் போது, பரமேஸ்வரனை அவரது ஊரைச் சோ்ந்தவா்கள் அழைத்துச் சென்ாக புகாா் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com