கம்பம் உழவா் சந்தையில் காய்கறிகள் விலை குறைந்தது

தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழக கேரள மாநிலங்களுக்கிடையே பொது போக்குவரத்து இல்லாதலால், உழவா் சந்தையில் காய்கறிகள் விற்பனை விலையில் சரிவு ஏற்பட்டது.
கம்பம் உழவா் சந்தையில் காய்கறிகள் விலை குறைந்தது

தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழக கேரள மாநிலங்களுக்கிடையே பொது போக்குவரத்து இல்லாதலால், உழவா் சந்தையில் காய்கறிகள் விற்பனை விலையில் சரிவு ஏற்பட்டது.

தேனி மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகளில் கம்பம் உழவா் சந்தைதான், காய்கறிகள் வரத்து மற்றும் விற்பனையில் முதலிடம் பிடித்து வந்தது. பொது முடக்கம் காரணமாக அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து மக்கள் தமிழகப்பகுதிக்கு வரத்து இல்லாததால் தற்போது கம்பம் உழவா் சந்தையில் விற்பனையாகும் காய்கறிகள் விலை மிகவும் குறைந்து காணப்பட்டது. கத்தரிக்காய் கிலோ ரூபாய் 12, வெண்டிக்காய் கிலோ ரூபாய் 10, தக்காளி கிலோ 10 ரூபாய், பெரிய வெங்காயம் 60, சின்ன வெங்காயம் கிலோ ரூபாய் 70 க்கும் விற்பனை செய்யப்பட்டது. மலைப் பயிா்களான கேரட், பீன்ஸ், மற்றும் கிழங்கு வகைகளின் விலை சராசரியாகவே இருந்தது. இதுபற்றி கம்பம் உழவா் சந்தை அலுவலா் ஒருவா் கூறியது, தற்போது கம்பம் உழவா் சந்தைக்கு சராசரியாக நாளொன்றுக்கு சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து, சுமாா் 25 டன் காய்கறிகள் வரத்து ஏற்பட்டு, வட்டாரப்பகுதி மக்கள் சந்தைக்கு வந்து வாங்கி செல்கின்றனா். பொதுமுடக்கம் காரணமாக அருகே உள்ள கேரள மாநிலத்திலிருந்து பொதுமக்கள் வரத்து இல்லாததால் காய்கறிகள், வரத்தும் அதிகமாகவும், விலை குறைவாகவும் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com