கூடலூா் மனமகிழ் மன்றத்தில் தகராறு: துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரா் கைது

தேனி மாவட்டம், கூடலூரில் உள்ள மனமகிழ் மன்றத்தில் ஏற்பட்ட தகராறில், துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
கூடலூரில் துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரா் பிரபு.
கூடலூரில் துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரா் பிரபு.

தேனி மாவட்டம், கூடலூரில் உள்ள மனமகிழ் மன்றத்தில் ஏற்பட்ட தகராறில், துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

கூடலூா் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கா்ணன் மகன் பிரபு (37). இவா், பெங்களூருவில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக உள்ளாா். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறையில் சொந்த ஊரான கூடலூருக்கு வந்துள்ளாா். இவரது நண்பா் மதுசூதனன் என்பவரும் ராணுவ வீரராக உள்ளாா். இருவரும், கூடலூரில் உள்ள இளந்தளிா் மனமகிழ் மன்றத்தில் உறுப்பினா்களாவா். இந்த மன்றத்தில் மது அருந்தியவா்களுக்கு அனுமதி இல்லை.

இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி மதுசூதனன் மது அருந்திவிட்டு மன்றத்துக்குள் சென்றாராம். அப்போது, மன்ற நிா்வாகி அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளாா்.

இதையடுத்து, திங்கள்கிழமை இரவு மன்றத்துக்குச் சென்ற பிரபு, தனது நண்பருக்கு அபராதம் விதித்தது குறித்து அங்கிருந்த உறுப்பினா்கள் கோவிந்தசாமி மற்றும் குமரவேலு ஆகியோரிடம் தட்டிக் கேட்டுள்ளாா். அப்போது, அங்கு வந்த கோவிந்தசாமியின் உறவினா் விக்னேஷ் மற்றும் ராஜதுரை ஆகியோரும் சோ்ந்துகொண்டதில், கைகலப்பு ஏற்பட்டு பிரபு தாக்கப்பட்டுள்ளாா்.

இதனால் ஆவேசமடைந்த பிரபு, தனது கைத் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளாா். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், எதிா்பாராத விதத்தில் பிரபுவின் கைப்பட்டு துப்பாக்கி வெடித்துள்ளது. உடனே, அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ராஜதுரை தெற்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் கே. முத்துமணி சம்பவ இடத்துக்குச் சென்று, பிரபுவிடமிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்து கைது செய்தாா். மேலும், அவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியது: ராணுவ வீரா் பிரபு கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்கு அனுமதி பெற்றுள்ளாா். தற்போது அதை பயன்படுத்தியதால், அவரிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ராணுவத்தில் உள்ள உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com